கொத்துரொட்டிக்குள் சிக்கிய போதைப்பொருள்! இருவர் கைது!

கொத்துரொட்டியில் மறைக்கப்பட்ட 5 கிராம் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் இருவருக்கு கொத்துரொட்டியை வழங்க முயற்சித்த இருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொத்துரொட்டியினுள் நுட்மான முறையில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொத்துரொட்டியில் பொலித்தீன் பக்கட்டுக்குள் வைத்து அதனுடன் ஹெரோயின் சுற்றி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.