பெரும் சோகத்தில் ஆழ்த்திய தற்கொலைகள்…!

வவுனியாவை சார்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.காதல் விவகாரத்தினால் வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியில் நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ரகுநாதன் சுகிர்தரன் (வயது 31) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அவரது காதலியும் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பு எட்டாம் வட்டாரத்திலிலுள்ள அவரது வீட்டு கிணற்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார்.

ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையை சேர்ந்த (13வயதுடைய மாணவி) கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் பேசியதால் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குணமாகிய நிலையில் நேற்றைய தினம் மாலை வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை கொண்டுள்ளார்.

குருமன்காடு காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கலைச்செல்வன் (வயது 28) என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.

வவுனியாவை சேர்ந்த சாமுவேல் என்ற மாணவன் யாழ். பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இவ்வாறு வடக்கு பகுதியில் தினசரி பலர் தற்கொலை செய்வது தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.