திருமலை விபத்து!! இளைஞன் ஸ்தலத்திலேயே மரணம்!!

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மீது அதிவேகமாகச் சென்ற டிப்பர் கனரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது உயிரிழந்தவர் மூதூர் பெரியபாலம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் டிப்பர் வாகனச் சாரதியைக் கைது செய்ததோடு, சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.