46 லட்சம் வாக்குகளுடன் 3190 ஆசனங்களைப் பெற்று அசைக்க முடியாத பெருவெற்றி!!

இலங்கையில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் இருக்கிறது.மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில் சிறிலங்கா பொதுஜன முன்னணி 222 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ஐதேக 41 சபைகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 34 சபைகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

இலங்கை நேரப்படி, இரவு 9.09 மணியளவில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பிரதான கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள், மற்றும் ஆசனங்களின் விபரம் வருமாறு;

சிறிலங்கா பொதுஜன முன்னணி – 4,598,119 – 45.11% – 3190 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 3,285,172 – 32.23% – 2213 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 906,629 – 8.89% – 634 ஆசனங்கள்

ஜேவிபி – 632,314 – 6.20% – 401 ஆசனங்கள்

|சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 470,867 – 4.62% – 339 ஆசனங்கள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 300, 029 – 2.94% – 370 ஆசனங்கள்