லசித் மாலிங்க கண்ணீருடன் விடைபெறுகிறார்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தில் நடைபெறும் சென். மோரிட்ஸ் ஐஸ் ரி-ருவென்ரி கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடிவரும் மாலிங்க, அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நான் மனதளவில் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டேன். இனி மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. நான் விரைவில் ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்.

ஆனால் இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் பேசவில்லை. மீண்டும் நாடு திரும்பியதும் உடற்தகுதியை பொறுத்து கிரிக்கெட் சபையிடம் பேசவுள்ளேன்.இப்போது எனது ஐ.பி.எல் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிந்துவிட்டது.

மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டேன். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளேன்’ என கூறினார்.