கர்ச்சிக்கும் புலியை உருவாக்கிய மாணவர்கள்!

முல்லைத்தீவு – செம்மலை மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்களால் அமைக்கப்பட்ட கர்ச்சிக்கும் புலியின் முகம் போன்ற இல்லம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செம்மலை மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நேற்று பிற்பகல் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.

இதில், சேரன், சோழன், பாண்டியன் ஆகிய இல்லங்கள் ரீதியாக மாணவர்கள் போட்டியில் பங்குபற்றி இருந்தார்கள்.

மேலும், இந்த நிகழ்வில் பாண்டியன் இல்லம் இல்ல அலங்காரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.

முழுமையான இயற்கை பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட கர்ச்சிக்கும் புலியின் முகத்தை மாணர்கள் வடிவமைத்துள்ளனர்.