தனது பிள்ளைகளை கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய தாய்!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் தாயார் ஒருவர் தமது 3 தத்துப் பிள்ளைகளையும் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோவா மாகாணத்தில் Nicole Finn என்ற 43 வயது தாயார், தத்தெடுக்கப்பட்ட தமது 3 பிள்ளைகளையும் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளதும், கொடும் பட்டினியால் 16 வயது இளம் பெண் மாரடைப்பால் இறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோவா மாகாணத்தில் குடியிருந்துவரும் Nicole Finn தமது 3 பிள்ளைகளையும் மிகவும் கொடூரமாக நடத்தியுள்ளார்.போதிய உணவு தராமலும், சுகாதாரமற்ற அறையில் அவர்களை பிணைத்தும் வைத்துள்ளார். இதனிடையே அவரது 16 வயது மகள் நடாலியின் உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்தது, எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு அவர் படுத்த படுக்கையானார்.ஆனால், அந்த கொடூர தாயார், படுக்கையைவிட்டு எழாத வரை எந்த உணவும் தரமுடியாது என மேலும் கொடுமைப்படுத்தியுள்ளார்.இதனிடையே, கடும் பட்டினியால் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடாலி மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது சகோதரர் ஜாடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நடாலி மரணமடைந்து 15 நிமிடங்கள் கடந்த நிலையில் அவரது கொடூர தாயார் மருத்துவமனைக்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளார். மருத்துவ உதவியாளர்கள் வந்து பார்த்தபோது இளம் பெண் நடாலி கழிவறையில் பிணமாக கிடந்துள்ளார்.அவரது உடல் எடை வெறும் 38 கிலோ மட்டுமே இருந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நடாலியின் சகோதரர் ஜாடன், தமது தாயார் போதிய உணவு மட்டுமல்ல, குடிக்க தண்ணீரும் வழங்குவதில்லை என்றார்.பல நேரங்களில் கழிவறை தண்ணீரை தாங்கள் குடிந்து பசியாறியதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அயோவா மாகாண நீதிமன்றம் Nicole Finn-கு 3 ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.