வித்தியாசமாக இருக்குதே என்ன இது..? காற்றை மட்டும் குடித்து வளரும், அன்றே வீட்டில் வாங்கி காட்ட சொன்னார்கள், ஏன் தெரியுமா..?

எல்லா நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும்..ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட ஆகாச கருடன் கிழங்கின் மகத்துவங்கள்:

large_kkarthik-raja-5974

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டாலே போதுமானது.. காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே வளர தொடங்கும்..

இந்தக் கிழங்கை பெரும்பாலும் நஞ்சு முறிவிற்காக பயன்படுத்துவார்கள்

சருமம் வெளுப்பு, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, போன்ற அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறப்பான மருந்து..

இந்தக் கிழங்கை அரைத்து பட்டாணி அளவிற்கு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க வேண்டும்.

agasa

நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல விஷங்கள் அப்படியே இறங்கும்..

கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்தால் போதும், வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.

இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொண்டு சென்று சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, பிறகு சாப்பிட்டால் உடல் வலுபெறும் என்கிறார்கள் முன்னோர்கள்..

சோரியாசிஸ்க்கு எளிய மருந்து..

ஆகாச கருடக்கிழங்கு தூள்,கருஞ்சீரகம் ,நற்சீரகம் சுத்திசெய்த பறங்கிப்பட்டை தூள் இவைகளை வெங்காயச் சாற்றில் நன்கு அரைத்து சூரிய ஒளியில் நன்கு காயவைத்து

காலை,மாலை,1/4 அல்லது 1/2 டீஸ்பூன் அளவு 10 நாள் கொடுக்கவும். 5நாள் இடைவெளி விட்டு மீண்டும் மருந்து சாப்பிடவும்.

இவ்வாறு தொடர்ந்தால் சோரியாசிஸ் போன்ற வியாதிகளுக்கு நல்ல மருந்தாகும்..