பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் பலி!

கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

images (4)பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியுள்ளது. இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கு முன்னர் கலகமடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.