ராஜபக்ஷ குடும்பம் கோத்தபாயவை சிறைக்கு அனுப்பும் முயற்சியில்!!

V.E.N.Mediaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சிறைக்கு அனுப்புவதற்காக ராஜபக்ச குடும்பத்தினரால் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அவமதிப்பதற்கே ராஜபக்ச குடும்பத்தினர் முயற்சித்தனர் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்து கொண்ட ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னரே கோத்தபாய நாட்டை விட்டு வெளியேறினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேல் மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.