மீண்டும் மஹிந்த?

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

160801084407_mahinda_512x288__nocreditஅரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருந்தாது என்றால், தனக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பின்படி தனக்கு எந்த தடையும் இருக்காது என மஹிந்த தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆறு ஆண்டுகள் ஜனாதிபதி பதவியை வகிக்க சட்ட தடைகள் இருக்கின்றவா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கு மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்