காத்திரமாக வாதாடிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்!

“சூடைக்குடா முருகன் கோவில் காணியைச் சீர்செய்த பொழுது அனுராதபுர அரசுக்காலப் புராதன சின்னங்களை உடைத்தனர்” என்று குற்றம் சாட்டிப் புதைபொருள் ஆய்வுத்துறை மற்றும் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மூதூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 10 ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலை ஆகினர்.

புதைபொருள் அல்லது புராதன சின்னங்கள் கொண்ட பகுதி என அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்காத ஓர் இடத்தில் புராதன சின்னங்களை உடைத்தனர் அல்லது சேதப்படுத்தினர் என்று வழக்கு தொடர முடியாது.

Captureuyyyt

மேலும் பொருள் ஆய்வுத்துறையால் மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்பு “புராதன சின்னங்களைக் கொண்ட பகுதி” என வழங்கிய கடிதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது .

எனவே இந்த வழக்கு அடிப்படையில் சட்ட வலுவற்றது. எனவே இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுமந்திரன் இரண்டு மணி நேரம் வாதாடினார்.

வாதம் மிகக் காத்திரமானதாக, வலுவானதாக இருந்தது. இந்தநிலையில் இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கனரக இயந்திர ஓட்டுநரும் உதவியாளருமான மூன்று சிங்கள இளைஞர்கள், நீதிபதியிடம் “தாம் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப்பணத்தைச் செலுத்தி விட்டு வீடு செல்லப் போவதாகக்” கூறினர்.

Capture-uuuuu

இதைப் பார்த்த நான்கு தமிழ் இளைஞர்களும் தாமும் அவ்வாறு செய்யப் போவதாகக் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவ்வாறே செல்லலாம் எனத் தீர்ப்பு வழங்கினார். இந்தநிலையில் வழக்கறிஞர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எனினும் இவ்வாறு புதைபொருள் அல்லது புராதன சின்னங்கள் கொண்ட பகுதி என அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்காத ஓர் இடத்தில் புராதன சின்னங்களை உடைத்தனர் அல்லது சேதப்படுத்தினர் என்று வழக்கு தொடர முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகத் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

Capturecccc