கண்ணீருக்கு மத்தியில் அக்கினியுடன் சங்கமமாகிய உடலங்கள்..!!

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் குறித்து சில செய்திகள் வெளிவந்துள்ளன.

timthumbகிளிநொச்சி – மாங்குளம், கொக்காவில் ஏ9 வீதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், யாழ். அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது 36), யாழ்.மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் இந்துகன் (வயது 19) யாழ். பருத்திதுறையை சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது 19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்கள்.

மேலும், அயலவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அல்வாய் – கரம்பன் இந்து மயானத்தில் இவர்களது பூதவுடல்கள் அக்கினியுடன் சங்கமமாகின.

இவர்கள் தொடர்பில் சில நெகிழ்ச்சியான செய்திகள் வெளிவந்துள்ளன.ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவரான நவரத்தினம் அருண் கல்வியை நிறைவு செய்துவிட்டு, குடும்பச்சுமையை ஏற்று, சொந்தக்காலில் நிற்க விரும்பி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்.

அன்னையின் அரவணைப்பினை இழந்து, தந்தையின் வழிநடத்தலில் வாழந்து வந்த சிந்துஜனால் வாழ்வில் வெகுதூரம் பயணிக்க முடியவில்லை.

ஏனைய இருவரான சந்திரசேகரம் ஜெயச்சந்திரனும் சின்னத்துரை கிருஸ்ணரூபனும் இரத்த உறவுகளாவர். இவர்களது துரதிஷ்டம் அன்றைய இரவு இவர்களது வாழ்வில் விடியாத இரவாகி விட்டது.

இந்த கோர விபத்தில் உயிர்நீத்த இவர்களுக்கு இன்று பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்