இலங்கையில் புழுக்களுடன் வசித்த- 94 வயது மூதாட்டி!!

94 வயதுடைய மூதாட்டி ஒருவர், அறையொன்றில் மலசலம் மற்றும் புழுக்களுடன் கடந்த ஆறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

கட்டுகஸ்தோட்டை, யடியாவில அந்தோனி தோட்டத்தைச் சேர்ந்த 94 வயதுடைய மூதாட்டியை கண்டி பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மீட்டனர்.

அவருக்கு 3 ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒரு மகள், தாயைக் கொடுமைப்படுத்தி, அறையொன்றில் சிறைப்படுத்தி வைத்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அறையில் பூட்டப்பட்டிருந்த மூதாட்டி சிறுநீர், மலம் கழித்திருந்ததாகவும், அந்தக் கழிவுகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததால், அறை முழுவதும் துர்நாற்றம் வீசியதுடன் , உடலில் புழுக்கள் மொய்த்த நிலையில் , மீட்கப்பட்டாரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.