மூன்று இளைஞர்களால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை மாணவி!!

தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த 14 வயது பாடசாலை மாணவியொருவர் ஹம்பாந்தோட்டை பொதுமருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீரவல – கல்கெடிய – கோன்வெலேன பிரதேசத்தை சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இவர் தெபரவெவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சிறுமியை மூன்ற இளைஞர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து , குறித்த சிறுமி கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குறித்த இளைஞர்களில் ஒருவரை குறித்த சிறுமி காதலித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

18, 21 மற்றும் 23 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வீரவில காவற்துறை தெரிவித்தது.

 625.500.560.350.160.300.053.800.900.160.90