தேர்தல் முறைப்பாடுகளில் முதலிடம் மேல் மாகாணம் – பெப்ரல் அமைப்பு

ஸ்ரீலங்காவின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் மேல் மாகாணம் முதலிடத்தில்  இருப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
paffrel

தேர்தல் வன்முறைகள் பதிவுசெய்யப்பட்ட இடங்களில்  தென் மாகாணம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சி பணிப்பாளர் சிறிதரன்  சபாநாயகம் சுட்டிக்காட்டினார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கொழும்பில் இன்று தேர்தல்  கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

இந்த செய்தியாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சி பணிப்பாளர் சிறிதரன்  சபாநாயகம் ,

தற்போது 25 சதவீத பெண்களுக்கான ஓதுக்கீடு தேர்தலில்  கொண்டுவரப்பட்டதையடுத்து தேர்தலில் அதிகளவில்  பெண்கள் ஈடுபாட்டுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.