மொகமது சாலா 2017 சிறந்த ஆபிரிக்கா கால்பந்து வீரராக!

2017 ஆம் ஆண்டின் சிறந்த ஆபிரிக்கா கால்பந்து வீரராக மொகமது சாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

imageproxyஇதனடிப்படையில் லிவர்புல் அணிக்காக விளையாடவரும் எபிக்தின் மொகமது சாலாவின் சிறந்த ஆட்டத்தால் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டிகளுக்கு எகிப்து அணி தகுதி பெற்றுள்ளது. மேலும் தற்கோது நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏஎஸ் ரொமா அணியில் இருந்து லிவர்புல் அணிக்கு மாறிய மொகமது சாலா 29 போட்டகளில் 23 கோல்களை போட்டு அசத்தியுள்ளார்.

இந்நிலையில் எகிப்து அணிக்காகவும் லிவர்புல் அணிக்காகவும் விளையாடிவரும் மொகமது சாலா 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆபிரிக்கா கால்பந்து வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் 1983 ஆம் ஆண்டு எகிப்தை சேர்ந்த மெக்மூத் அல்காதிப் இவ் விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.