இலங்கை அணி வீரர்களுக்கு உளவியல் நிபுணரின் ஆலோசனை!!

அவுஸ்ரேலியா நாட்டு உளவியல் நிபுணரின் ஆலோசனை நேற்று இலங்கை கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தொடர்ந்து நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக தலைமை பயிற்சியாளராக பதவி பெற்ற சந்திக்க ஹத்துருசிங்க அணியை வெற்றி பாதைக்கு எடுத்து செல்வதற்காக பல வகைகளில் உடல் மற்றும் உள பயிற்சிகளை வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவை சேர்ந்த உளவியல் நிபுணர் பில் ஜோன்ஸியை வரவழைத்து உள பயிற்சிகள் வழங்கியுள்ளார்.இதனடிப்படையில் உளவியல் நிபுணர் ஆரம்பகட்ட பயிற்சியாக ஒவ்வொரு வீரர்களுக்கும் உள்ள தனித்திறமைகள் மற்றும் ஆளுமைகளை விருத்திசெய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.பின்னர் பயிற்சியாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் சிறந்த உறவை ஏற்படுத்த வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல உளவியல் பண்புகளை விருத்தி செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

news_08-03-2016_75sl