ஆலயத்திற்கு சென்று திரும்பிய பெண் உயிரிழந்துள்ளார்!

மட்டக்களப்பு – தேற்றாத்தீவு பகுதியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Capturedxvxdvஇந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் தேற்றாத்தீவு பழைய தபாலக வீதியைச் சேர்ந்த குமாரசாமி பூபதிப்பிள்ளை (71வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று திரும்பும் போது திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அவரை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.