பட்டாசுகளை அவதானத்துடன் கையாள வேண்டும்!

நாடெங்கிலும் இன்று கிறிஸ்துமஸ் தினம்  கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிறுவர் முதல் பெரியோர் வரை  பட்டாசுகளைக் கொழுத்தி தமது மகிழ்ச்சியைப் வெளிக்காட்டி வருகின்றனர்.

பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் கையாள வேண்டும்!

இந்த நிலையில்,  பண்டிகைககள் காலத்தில் பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் கையாளுமாறும், தரமான பட்டாசுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

இதேவேளை பட்டாசுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதன் அவசியத்தை தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவின் தாதி பயிற்சிப் பிரிவு அதிகாரி, திருமதி புஷ்பா ரம்யா சொய்சா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilDailyNews_4100109338761