குழந்தைகளிடம் என்ன சொல்வேன் என கூறிய தந்தை! கலங்க வைத்த புகைப்படம்!

பிரித்தானியாவில் புற்றுநோய் காரணமாக இறந்த மனைவியின் புகைப்படத்தை அவரது கணவர் மிகுந்த வேதனையுடன் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரித்தானியாவின் Milton Keynes பகுதியைச் சேர்ந்தவர் Peter Lowe. இவருக்கு Donna என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் Donna-வுக்கு கடந்த டிசம்பர் மாதம் கர்ப்ப வாய்புற்றுநோய் இருப்பது தெரியவந்தது, அதன் பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பரவியதால், புற்றுநோயின் தாக்கம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த வேளையில் கடந்த ஆகஸ்ட் மாதம் Donna மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

புற்றுநோயுடன் அனுதினமும் போராடி வந்த இவருக்கு கடந்த ஆறு வாரங்களாக ரேடியோதெரபி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இவர் கடந்த 22-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த புகைப்படத்தை அவரது கணவர் Peter Lowe என்னுடைய அன்பு மனைவி, என்னுடைய உலகம், எனக்கு அனைத்துமே அவள் தான், ஆனால் தற்போது நான்கு குழந்தைகள், தாய், அண்ணன் மற்றும் தங்கை ஆகியோரை விட்டு சென்றுவிட்டாள், என் வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் நான் என்ன சொல்வேன் இவள் வருவாள் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவளுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக என் குழந்தைகள் பல கனவுகளுடன் உள்ளனர், இதை நான் எப்படி கூறப்போகிறேன் என்று மனம் வருந்தி கண்ணீருடன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலே அவரது மனைவி தொடர்பான புகைப்படம் 20,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளதுடன், புகைப்படத்தைக் கண்ட பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஆண்டு தோறும் 3,000 பேர் கர்ப்பவாய் புற்றுநோயின் காரணமாக பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<