தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் தகவல் உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல் படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி இன்றைய தினம் (07) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிரிட்ஜ் வியூ விடுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

freedom-of-information-act

இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

இப்பயிற்சி நெறியில் தகவல் உரிமை, தகவலுக்குப் பிரவேசித்தல், தகவல் சுதந்திரம், அடிப்படை உரிமையாக தகவல் உரிமை, தகவல் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம், தகவல் உரிமை பற்றிய அடிப்படைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.

குறித்த பயிற்சி நெறியில் உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த பயிற்சி நெறியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் மற்றும்  மாவட்ட செயலகங்களிலுமுள்ள தகவல் உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர்.

தொடர்ந்தும் இந்த பயிற்சி நெறி எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.