இரட்டைவாய்க்காலில் குண்டு வெடிப்பு: மக்கள் மத்தியில் பரபரப்பு

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று மாலை குண்டு உள்ளிட்ட சில வெடிபொருட்கள் வெடித்ததில் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சிலரினால் குறித்த பகுதியில் தீ முட்டப்பட்டுள்ளது.

இதன்போது அவ்விடத்தில் இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட நிலையில் இருந்த வெடிபொருட்களே வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் ஆபத்தான வெடிபொருட்கள் இன்னமும் மீட்கப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90