படத்தில் நீங்க பார்த்த முதல் உருவம் எது??? உங்கள் குணம் இதுதான்!!!

சில சமயங்களில் சாலையில் பல வாகனங்கள் சென்றாலும், நாம் வாங்க விரும்பும் வாகனம் மட்டுமே அதிகம் கண்ணில்படும்படி இருக்குமல்லவா? அப்படி தான் இந்த சைக்கலாஜிக்கல் விளையாட்டும்.

maxresdefaultஎன்ன தான் இந்த படத்தில் பல பொருட்கள் இருந்தாலும், உங்களது விருப்ப, வெறுப்புகளுள் தொடர்புடைய பொருள் தான் உங்கள் கண்ணில் முதலில் தென்படும்.

அப்படி நீங்கள் இந்த படத்தில் பார்க்கும் முதல் பொருள், உங்களது ஆழ்மனதின் அச்ச உணர்வு பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

கம்பளிப் புழு!
இந்த படத்தில் நீங்கள் முதலில் கம்பளிப் புழுவை கண்டிருந்தால், உங்களது ஆழ்மனதில் அதிகமாக இருக்கும் அச்சம் பேய் மற்றும் ஆவிகளை சார்ந்ததாக இருக்கும்.

உங்களுக்கு அமுக்குவான் பேய் குறித்த அச்சமும் இருக்கலாம், இதை நீங்கள் முன்னர் உணர்ந்தும், அனுபவித்தும் கூட இருக்கலாம். அதே போல, ஏதேனும் பேய் படம் பார்த்த பிறகு, இரவு தூங்க முடியாமல் அச்சப்படும் உணர்வும் உங்களிடம் இருக்க வாய்ப்புகள் உண்டு.

பட்டாம்பூச்சி!
நீங்கள் இந்த படத்தில் முதலில் பட்டாம்பூச்சியை கண்டிருந்தால், உங்கள் ஆழ்மனதில் துரோகம் செய்து விடுவார்களோ, காட்டி கொடுத்திவிடுவார்களோ, பழிவாங்கி விடுவார்களோ போன்ற பாதுகாப்பின்மை சார்ந்த அச்சம் அதிகமாக இருக்கும்.

நீங்கள் இவற்றை அதிகம் கடந்து வந்த நபராக கூட இருக்கலாம். நீங்கள் இந்த அச்சத்தை வெளியாட்களிடம் இருந்து மறைத்து வைத்திருப்பீர்கள்.

கத்தி!
நீங்கள் இந்த படத்தில் முதலில் கத்தியை கண்டிருந்தால், உங்களிடம் ஆழ்மனதில் நோய்வாய்ப்பட்டு போய்விடுவோமா என்ற அச்சம் இருக்கும்.

இது போன்ற அச்சத்தின் காரணத்தாலேயே நீங்கள் வலுவாக, ஆரோக்கியமாக இல்லை என்ற உணர்வோடு வாழ்ந்து வருவீர்கள்.

மரணம் குறித்த அச்சம் உங்களிடம் இருந்துக் கொண்டே இருக்கும்.

ஆப்பிள்!
நீங்கள் இந்த படத்தில் முதலில் ஆப்பிளை கண்டிருந்தால், உங்களிடம் மரணம் குறித்த அச்சம் ஆழ்மனதில் அதிகமாக இருக்கும்.

உங்களது மரணம் மட்டுமின்றி, உங்கள் விருப்பத்திற்குரிய நபர்களும் பிரிந்து அல்லது இறந்து விடுவார்களோ என்ற அச்சம் உங்களிடம் இருக்கும்.

இதற்கு, நீங்கள் அதிகம் விரும்பிய நபர், உங்களை விட்டு பிரிந்த காரணமாகவும் இருக்கலாம். உங்களால், நீங்கள் விரும்பும் நபரை இழப்பதை தாங்கிக் கொள்ள முடியாது. மிகவும் மனமுடைந்து போவீர்கள்.