மகனைக் காப்பாற்ற தன்னுயிரைப் பறிகொடுத்த தாய்!! மட்டக்களப்பில் சோகம்!!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ரோபாலன் கலைவாணி என்ற 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; குறித்த பெண்ணின் மகன் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்சார வயரை இணைத்த போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன்போது மகனைக் காப்பாற்ற முயற்சித்த தாயாருக்கு, மின்சாரம் தாக்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் மகனுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், தாயார் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.