ராஜா ராணி தொடரின் வில்லி ஷப்னத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம்.

ராஜா ராணி தொடரின் வில்லி ஷப்னத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம்.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடிக்கும் ஷப்னம், முதன் முதலில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்கு வந்தார். இவர் அடுத்து தெய்வமகள் என்ற பிரபல தொடரில் சபீதா ஆனந்தின் மருமகளாக நடித்தார். இவர் எப்போதும் சுட்டித்தனமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். இவர் வில்லியாக நடித்தாலும் இவரது நடிப்பு சிரிப்பை மூடும்.

ராஜா ராணி தொடரின் வில்லி ஷப்னத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம்.

மேலும், இவருக்கும் பிரபல ஐ.டி கம்பெனியில் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ஆர்யன் என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது.