மது போதையில் ஏற்பட்ட கை கலப்பில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் மது போதையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் வீதியில் வீழ்ந்த போது அவ் வழியே வந்த முச்சக்கரவண்டியில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 54 வயதுடைய முத்துத்தம்பி துரைராஜசிங்கம் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலைக்கு இருவர் தனித்தனியே மது அருந்துவதற்கு நேற்று இரவு 8 மணியளவில் சென்றுள்ளனர்.

imageproxy (5)மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்படவே முத்துத்தம்பி மதுபானசாலையில் இருந்து வெளியேறி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியான புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் சோளம் விற்பனை செய்யும் கடைக்கு முன்பாக நின்று கொண்டிருந்த போது மது அருந்தி விட்டு மற்றைய நபரும் வந்து மீண்டும் இருவருக்கும் வாய்த்தர்க்கம் முற்றி கைக்கலப்பிற்கு சென்றுள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட கைக்கப்பின் போது முத்துத்தம்பியை மற்றைய நபர் தள்ளி விட, அவ் வழியில் மட்டக்களப்பை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியில் முத்துத்தம்பி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மது போதையிலிருந்த நபரையும், முச்சக்கரவண்டி சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.