கமல் அரசியலுக்கு வர வேண்டும்: ஓவியா பரபரப்பு பேச்சு

கோவை வந்த நடிகை ஓவியா நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டும் என பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

oviyaகோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, அரசியலுக்கு நாம் வரவேண்டும் என நினைத்தாலும் அது மக்கள் வாக்களித்தால் மட்டுமே முடியும். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதை தான் நடிகர் கமல் செய்ய நினைக்கிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும். அவர் நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வருவார் என நான் நினைக்கிறேன். அவருக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.