30 ஆண்டில் முதல் முறை: விளையாடும் தகுதியை இழந்த அமெரிக்கா!

கால்பந்து உலகக்கோப்பை தகுதிசுற்றுப் போட்டியில், டிரினிடாட் – டோபாகோ அணியுடன்அமெரிக்கா தோல்வியை சந்தித்ததாலும்,கோஸ்டா ரிகாவுடன் நடந்த போட்டியில் பனாமா போட்ட சர்ச்சைக்குரிய கோல் ஒன்றினாலும், 1986 ஆம் ஆண்டில் இருந்து முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைஅமெரிக்கா இழந்துள்ளது.

_98262217_5ab5e331-aee4-4378-94f6-00b9e41acb4b

டிரினிடாட்டில் நடந்த போட்டியில் அமெரிக்க அணி நேற்றிரவு ஆடத் தொடங்கியபோது, தமது பிரிவில் மூன்றாவது இடத்திலிருந்தது. அப்போட்டியில் அமெரிக்கா 2 – 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் பனாமாவில் நடந்த ஒரு தகுதிச் சுற்றுப் போட்டியில் கோஸ்டா ரிகா-பனாமா அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில், ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தகுதியை முதல் முறையாகப் பெற்றது பனாமா. அத்துடன் அது தமது பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து, அமெரிக்காவை ஐந்தாவது இடத்துக்குத் தள்ளியது.

எனினும், பனாமா அணியை சேர்ந்த கேப்ரியல் டோர்ரஸ் அடித்த பந்து கோல் போஸ்ட் லைனை தொடவில்லை என்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த கோல் குறித்து கோஸ்டா ரிகா புகார் எழுப்பியிருந்தாலும் குவாதிமாலாவை சேர்ந்த ஆட்ட நடுவர் வால்டர் லோபெஸ் அதை கோல் என்றே அறிவித்தார்.

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய தீவுகளுக்கான அணி பிரிவில் முன்னிலை வகிக்கும் மெக்ஸிக்கோ அணியை ஏற்கனவே ஹோண்டுராஸ் அணி வீழ்த்தி நான்காவது இடத்தை பிடித்ததால், பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பனாமா அணியை 4-0 என்ற கோல் புள்ளிகளில் அமெரிக்கா வீழ்த்திய போதும், ஒன்பது போட்டிகளில் விளையாடி அது வெறும் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. எனவே, டிரினிடாட் மற்றும் டோபாகோவுடன் போட்டியை எதிர்கொள்வதற்கு முன்பு கூட ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறுவதற்கு நெருக்கத்தில் கூட அமெரிக்கா இருக்கவில்லை.