இலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்!!

சிறிலங்கா காவல்துறையினருக்கு நன்கு பரிச்சயமானவர்களே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் தொடர்பாக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையினையும் எடுப்பதில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

mavai

சூரியா அமைப்பின் ஏற்பாட்டில் சிங்களை மொழிக் கற்கையைப் பூர்த்திசெய்யத மாணவர்களுக்குசான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

போருக்குப் பின்னர் வடமாகாணத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இதனால் எமது மாணவ சமுதாயம் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு வருகின்றது.

சில பேரினவாதச் சக்திகள் எமது சமுதாயத்தை திட்டமிட்டு அழித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே போதைப் பொருள் பாவனையால் எமது மண் அழிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இந்த நாட்டில் மது பாவனை அதிகமுள்ள இடமாகவும் யாழ் மண்ணே திகழ்கின்றது.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் எமது மண் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் இல்லாமல் போன பின்னர் எமது மண் சிதைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் மாணவ சமுதாயம் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றது எனத் தெரிவித்தார்