திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி, இந்தியா- சிறிலங்கா பேச்சு!!

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய, சிறிலங்கா கூட்டுப் பணிக் குழு பேச்சுக்களை நடத்தி வருகிறது.

n

வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுகம் , மின் திட்டங்கள் தொடர்பாக கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களின்  அபிவிருத்தி தொடர்பாக கூட்டுப் பணிக்குழுவின் ஊடாக, இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தி வருவதாக, இந்தியன் ஓயில் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பாக இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னதாக இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.