இன்று திருப்பதி செல்லும் சிறிலங்கா அதிபர்!!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

sri-lanka-president-inside-srivari-temple4-copy

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்ளும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கி ஓய்வெடுப்பார்.

நாளை அதிகாலை சிறப்பு தரிசன சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்.

இதைத் தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில், ஏழுமலையானின் பிரசாதம், 2018-ம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை சிறிலங்கா அதிபருக்கு  தேவஸ்தான அதிகாரிகள் வழங்குவர்.

சிறிலங்கா அதிபரின் வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பார்வையிட்டு பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தனர்.