சுவிஸில் தென்றலின் தாலாட்டு நிகழ்வு…

எதிர்வரும் 01.10. 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இனிய நந்தவனம் மாத இதழும் சுவிஸ் அன்னைஇல்லம் மகளிர் அமைப்பும் இணைந்து தென்றலின் தாலாட்டு 2017 எனும் நிகழ்வை நடாத்தவுள்ளார்கள்.

22016208_1568537369872223_2029465879_n

இசைநிகழ்ச்சி, (சுவிஸ் முன்னணிப் பாடக பாடகிகள் )நடனநிகழ்ச்சி, (திரையிசை,மேற்கத்தேய நடனம் ) நாடகம் , பட்டிமன்றம் எனப் பல்சுவை நிகழ்வுகளுடன் சுவிஸ் தமிழர்களில் மக்கள்பணி செய்தவர்களில் கலைத்துறை ,ஊடகத்துறை ,அரசியல்துறை ,ஆன்மீகத்துறை ,சமூகப்நலப்பணித்துறை என ஐந்து துறைகளில் பணிசெய்த சாதனையாளர்கள் “மாண்புறு தமிழர்” என விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள் .நிகழ்வின் சிறப்பு அம்சமாக “இனிய நந்தவனம்சர்வதேச சிறப்பிதழ் ” வெளியிடப்படும்.

நிகழ்வுகள் குறிப்பிட்டநேரத்தில் ஆரம்பமாகும் என்பதோடு சிறப்பு,கௌரவ விருந்தினர்கள் அமெரிக்கா ,பிரான்ஸ் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொள்கிறார்கள் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.
முக்கிய குறிப்பாக இந்நிகழ்வுக்கான அனுமதி இலவசமாக உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.!

விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக வித்தகன் சுவிஸ் சுரேஸ் மற்றும் இனியநந்தவனம் சந்திரசேகரனும் உள்ளனர் . அனைவரும் கலந்து சிறப்பிக்கப்பதோடு ஜனரஞ்சக நிகழ்வுகளையும் கண்டுகளிக்குமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் .