ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்- (வீடியோ)

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் வளர்க்கும் பூனைகள் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.

TELEMMGLPICT000139560070_trans_NvBQzQNjv4Bqx1rGucoo2J_ExhuM2sOt-5Dg7ACGJPdPR4xgCzbOV8A-640x1024

இவர்களின் பூனைகளில் ஒன்றான சிக்னஸின் வால் மிக நீளமானது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இது தான். இதன் வாலின் நீளம் 18.4 அங்குலம்.

சிக்னஸுக்கு 2 வயதாகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இயல்பான பூனைகளைவிட இதன் வால் மிக நீளமாக இருந்தது.

இந்தப் பூனையின் சகோதரனுக்கு வால் சாதாரணமாகத்தான் இருக்கிறது. காரணம் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் பூனையின் வால் அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பித்தது. அதற்குப் பிறகே சிக்னஸின் வாலைப் பாதுகாக்க ஆரம்பித்தோம்.

கதவு பின்னால் ஒளிந்து கொள்ளும்போது வால் கதவில் சிக்கிவிடும். உயரமான இடத்திலிருந்து குதிக்கும்போது வாலுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிடும்.

இவனைக் கண்காணிப்பதே ஒரு பெரும் வேலையாக மாறிவிட்டது. சென்ற வருடம் ஜூன் மாதம் கின்னஸ் நிறுவனத்திலிருந்து வந்து சிக்னஸின்  (Cygnus) வாலை அளந்தனர்.

17.58 அங்குல நீளம் இருந்தது. தற்போது 18.4 அங்குலமாக வளர்ந்துவிட்டது. மாதந்தோறும் வளர்ச்சி தெரிகிறது.

என லாரன் தெரிவித்துள்ளார்.

TELEMMGLPICT000139442990_trans_NvBQzQNjv4BqqVzuuqpFlyLIwiB6NTmJwfSVWeZ_vEN7c6bHu2jJnT8-667x1024சிக்னஸின் சகோதரன் ஆர்க்ட்ரஸும்   (Arcturus Aldebaran Powers) ஒரு கின்னஸ் சாதனையை நிகழ்த்திவிட்டது.

உலகின் மிக உயரமான வீட்டுப் பூனை என்ற பட்டத்தை அது பெற்றிருக்கிறது. இதன் உயரம் 19.5 அங்குலம்.

ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றார்கள் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர்.