பஸ்ஸில் பாலியல் தொல்லை ; ஆணுக்கு பெண் செய்த காரியம்.

bjpதனியார் பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது பாலியல் தொல்லை கொடுத்த ஆண் ஒருவரின் மர்ம உறுப்பினை நோக்கி காலால் உதைத்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸின் பயணிகள் அமர்வதற்கு ஆசனங்கள் மீதமுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண், அப்பெண்ணின் அருகாமையில் சென்று அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் குறித்த ஆண்ணின் மர்ம உறுப்பை நோக்கி காலால் உதைத்து விட்டு, அந்நபரை திட்டியவாறு பஸ்ஸிலிருந்து இறங்கி சென்றார்.

குறித்த பெண்ணின் துணிச்சலான தைரியத்தினை சமூகவலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.