கொடூர தந்தைக்கு நேர்ந்த கதி!

images (8)நாவுல – ஹபுகஸ்யாய பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாவுல காவற்துறை தெரிவித்துள்ளது. மணல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள தனது தந்தை இரவு பத்து மணியளவில் மது அருந்திவிட்டு வந்து தனது தாய் மற்றும் மூத்த சகோதரனை அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டு தனது மூன்று இளைய சகோதரிகளின் முன்னிலையில் தன்னை வன்புணர்விற்கு உள்ளாக்கியதாக குறித்த மாணவி நாவுல காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு நாவுல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது , சந்தேகநபரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல முதன்மை நீதவான் சுரங்க முணசிங்க உத்தவிட்டுள்ளார். சம்பவத்தை தொடர்ந்து குறித்த மாணவி சிறப்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாவுல காவற்துறையின் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஜீ.என் குமாரி மொரகொல்ல எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.
சிறுமி தொடர்பான பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சிறுமி அவரின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் நாவுல காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. குறித்த சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.