ஆசி­ரி­யர்கள், பாட­சாலை நேரங்­களில் வெளி வேலை­களில் ஈடு­பட்­டு ­வ­ரு­வ­தாக தகவல்.

Untitledமேல் மாகாண பாட­சா­லை­களில் கல்வி கற்­பிக்கும் பெரும்­பா­லான ஆசி­ரி­யர்கள், பாட­சாலை நேரங்­களில் வெளி வேலை­களில் ஈடு­பட்­டு ­வ­ரு­வ­தாக தெரி­யவந்­துள்­ளது.

பாட­சாலை வகுப்பு நேரங்­களில் டியூஷன் வகுப்­புகள் நடத்­துதல், பிர­தே­சத்தில் செய்தி சேக­ரிப்பு பணி­களில் ஈடு­படல், பல்­வேறு சிறு தொழில்கள் செய்தல் உள்­ளிட்ட தமது சொந்த தேவை­களின் நிமித்தம், பெரும்­பா­லான ஆசி­ரிய ஆசி­ரி­யைகள் இவ்­வாறு பாட­சாலை கட­மை­களை புறக்­க­ணித்து செயற்­ப­டு­வ­தாக, பெற்­றோர் மற்றும் பழைய மாண­வர்கள், மேல் மாகாண கல்வி அமைச்சின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளனர்.

இது தொடர்பில் ஆசி­ரியர் சங்­கங்­களின் ஊடா­கவும் மேல் மாகாண கல்வி அமைச்­சுக்கு முறைப்­பா­டுகள்  செய்­யப்­பட்­டுள்­ளதை தொடர்ந்து இந்த விவ­காரம் குறித்து மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோம­வங்­சவின் கவனம் திரும்­பி­யுள்­ள­துடன், இது சம்­பந்­த­மாக உட­னடி அவ­தானம் எடுத்து செயற்­பட்டு, தனக்கு அறிக்­கை­களைச்  சமர்ப்­பிக்­கு­மாறு, அமைச்சர் மேல் மாகாண கல்விக் காரி­யா­லய  கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

இதே­வேளை, இவ்­வா­றான நட­வ­டிக்கைச் செயல்­களில் ஆசி­ரி­யர்கள் ஈடு­ப­டு­வது உட­ன­டி­யாக தவிர்க்­கப்­படல் வேண்டும் என்றும் தொடர்ந்தும் இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு எதி­ராக, கல்வி நட­வ­டிக்கைச் சட்டங்களுக்கு அமைவாக, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேல் மாகாண கல்வி அமைச்சினால் முன்கூட்டியே அறி வுறுத்தப்பட்டுள்ளது.