திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் உயிரை மாய்த்துக்கொண்ட பள்ளி ஆசிரியர்!

திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தியில் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DFD

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

தங்கவேலுக்கு, திருமணம் செய்துவைக்க கடந்த சில வருடங்களாகவே அவரின் பெற்றோர் பெண் தேடி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே, திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தியில் இருந்த தங்கவேல், நேற்று அதிகாலை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சடலமாக அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தங்கவேல் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.