படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சாட்சியமளித்த படையதிகாரிக்கு உயர் பதவி

படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சாட்சியமளித்த படையதிகாரி ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

a02_24052773

அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய முன்னாள் உயர் படையதிகாரி ஒருவருக்கு எதிராக இதுவரையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரி, இலங்கை அரச படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சத்தியக்கடதாசி மூலம் அறிவித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக உயர் இராஜதந்திர பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்னாள் படையதிகாரி தனது பெயரைக் கூட மாற்றிக் கொண்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.