இலங்கை குடிமகனுக்கு சுவிஸில் நடந்த விபரீதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

download (17)

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Brugg ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுவிஸ் நாட்டை சேர்ந்த 41 வயதான நபர் மற்றும் இலங்கையை சேர்ந்த 34 வயதான நபர் ஆகிய இருவரும் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று இருவர் மீதும் மதுபான போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தாக்குதலில் இருவரினதும் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் இலக்கான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்திய 4 பேரில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரித்திரியா நாட்டை சேர்ந்த மூவருக்கும் 19 முதல் 25 வயதுடையவர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான தகவலை வெளியிடாத பொலிசார் மூவரிடமும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.