மூன்றாவது டெஸ்ட்: ஜடேஜாவுக்கு பதிலாக அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

tst-720x450

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் அக்ஸர் படேல் இடம்பெற்றிருப்பதனை இந்தியக் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நடவடிக்கை மேற்கொண்டது.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை மறு தினம் (சனிக்கிழமை) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.