இலங்கை அணிக்கெதிரான டெஸ்டில் விளையாட குல்தீப் யாதவ் ஆர்வம்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

kultheep

மூன்றாவது போட்டியில் விளையாட ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் அவருக்க பதிலாக அக்ஸர் படேல், 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்திய அணியின், 11 பேர் கொண்ட அணியில் விளையாடுவதற்கு இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்க்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

இதுதொடர்பாக குல்தீப் யாதவ் கூறுகையில், “இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் எனது பெயர் இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன். இலங்கை உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இந்த வாய்ப்பை எனது திறமைக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறேன். இந்திய அணிக்காக விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன். எனது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவேன்” என தெரிவித்தார்.