தற்கொலைசெய்யப்போவதாக கடிதமெழுதிவிட்டுச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்பு

இன்று காலை வீட்டை விட்டு வெளியேறும் போது தான் தற்கொலைசெய்யப்போவதாக கடிதமெழுதிவிட்டுச் சென்ற நபரொருவர்  இன்று மாலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

batticalo

 

மட்டக்களப்பு, பாலமீன்மடு கடற்கரை பகுதியில் இருந்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவைச்  சேர்ந்த  41 வயதுடைய சுப்பிரமணியம் குமார் எனவும் ஒரு பிள்ளையின் தந்தையெனவும்  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் வேலை செய்யும் இவர் , இன்று காலை வீட்டை விட்டு வெளியேறும் போது கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாக  இறந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.