சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தை சேர்ந்த 14 வயது சிறு­மியை கடத்­தி­சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்­த­வ­ருக்கு உதவி, ஒத்­தாசை புரிந்த இரு­ பெண்­களை நேற்றுக் காலை கைது செய்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்­டர்­களில் ஒருவர் சிறு­மியின் உற­வி­ன­ரான ஆலை­ய­டி­வேம்பு கோளாவில்-3ஆம் பிரி­வைச்­சேர்ந்த 52 வய­து­டைய பெண்­ணாவார். மற்­றைய பெண் பொத்­துவில்-10 ஆம்­பி­ரிவில் வசிக்கும், சந்­தேக நபரின் உற­வி­ன­ரான 50 வய­து­டைய பெண்­ணாவார்.

AJ__95_

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது ஆலை­ய­டி­வேம்பு கோளாவில்-2ஆம் பிரி­வைச்­சேர்ந்த 23 வய­து­டைய நப­ரொ­ருவர் கடந்­த­மாதம் 31ஆம் திகதி சிறு­மியை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் இருந்து பொத்­துவில் பிர­தே­சத்­துக்கு கடத்தி சென்று பொத்­துவில் இன்ஸ்­பெக்டர் ஏத்­தத்­தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்­ளனர். மறுநாள் சிறு­மியை அழைத்து வந்து கோளாவில்- 3ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் விட்­டுச்­சென்­றுள்ளார்.

இதே­வேளை சிறு­மியின் கடத்தல் சம்­பவம் தொடர்­பாக சந்­தேக நப­ரான கடத்­திய இளை­ஞனும், சிறு­மியின் தாயும் கடந்த 5ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு அன்­றைய தினம் அக்க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்ற பதில் நீதவான் ஏ.எச்.சமீம் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது பதில் நீதவான் இருவரையும் இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.