உங்கள் பாதங்களில் சன் டேன் இருக்கிறதா? அப்போ இத ட்ரை பண்ணுங்க !!

நாம் அதிகமாக கண்டு கொள்ளாத ஒரு பகுதி பாதங்கள் ஆகும். ஆமாங்க நம்மை தாங்கி நடக்கும் பாதங்களை அத்தி பூத்தாற் போல் தான் நாம் பராமரிக்கவே செய்கிறோம். எல்லா நாட்களும் வெயிலிலும், மழையிலும் நடக்கிறோம், ஓடுறோம், நிற்கிறோம், உட்காருகிறோம்.

leg

இவையெல்லாம் செய்வதற்கு உதவியான பாதத்திற்கு வெறும் ஓரு கப் தண்ணீரை மட்டுமே கழுவ பயன்படுத்துகிறோம். இதன் விளைவு நிறமாற்றம் அடைந்த, சன் டேன்னுடன் கூடிய ஆரோக்கியமில்லாத பாதங்களே பரிசாக கிடைக்கின்றன.

நீங்கள் பாதங்களை நன்றாக பராமரித்தாலே போதும் உயிரை குடிக்கும் சரும நோய்கள் வராது. உங்களின் அழகற்ற பாதம் உங்கள் அழகான ஸ்டைலான காலணிகளுக்கும் பொருந்தா ஜோடியாகி விடுகிறது.

எனவே அப்பேற்பட்ட பாதங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். பாத பராமரிப்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். பாத பராமரிப்பு என்பது ஆண் மற்றும் பெண் இரண்டு பேருக்கும் முக்கியம். சலூனில் செய்யப்படும் பாத பராமரிப்பு (பெடிக்யூர்) உங்களுக்கு அழகான பாதத்தையும் அதே சமயத்தில் அளவு கடந்த பில்லையும் தரும். ஆமாங்க இதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகம். மேலும் உங்கள் அவசரமான வாழ்க்கையில் பாதத்தை பராமரிக்க நேரம் கிடைப்பது என்பது மிகவும் கடினம். எனவே தான் உங்கள் பாதங்களை வீட்டிலேயே இருந்து எளிதாக அழகாக மாற்ற இந்த படிப்படியான முறைகளை செய்யலாம். பாத பராமரிப்பு என்பது பாதத்திற்கான பேக் மற்றும் பாத ஸ்க்ரப்பை கொண்டு உங்கள் பாதங்களின் நிற மாற்றங்களை எளிதாக சரி செய்துவிடும்.

1.நெயில் பாலிஷ் ரீமுவர் பயன்படுத்துதல் இதை செய்ய கொஞ்சம் நேரமாகும். முதலில் நெயில் பாலிஷ் ரிமூவரை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து கொண்டு பாதங்களில் உள்ள நகங்களை அதைக் கொண்டு நன்றாக துடைக்க வேண்டும். நல்ல நெயில் பாலிஷ் ரீமுவரை பயன்படுத்தினால் நகங்களில் உள்ள எனாமல் நீங்காமல் இருக்கும்.

2.வெதுவெதுப்பான நீரில் பாதங்களை வைத்தல் பாத பராமரிப்புக்கு செல்வதற்கு முன் உங்கள் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைக்க வேண்டும். ரொம்ப சூடான நீரை பயன்படுத்தினால் பாத சருமம் பாதிப்படைந்து விடும். ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொண்டு அதில் பேபி ஷாம்பு அல்லது லிக்யூட் சோப் ஊற்ற வேண்டும். இந்த கலவையில் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்தால் நல்ல ஒரு ரீலாக்ஸான நிலைமை கிடைக்கும்.

3.பியூமிஸ் கல் பயன்படுத்துதல் : வெதுவெதுப்பான நீரில் இருந்து காலை எடுத்த பிறகு பியூமிஸ் கல் கொண்டு பாதங்களின் குதிகால், அடிப்பகுதி போன்றவற்றில் உள்ள இறந்த செல்கள், சீரற்ற தோல், ஆணிகள் போன்றவற்றை நீக்குகிறது. உங்களிடம் பியூமிக் கல் இல்லையென்றால் பாத பிரஷ்ஷைக் கொண்டு செய்யலாம்.

4.நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்குதல் நக வெட்டி கருவியை கொண்டு முதலில் உங்கள் நகங்களை விருப்பத்திற்கேற்ப வெட்டி அழகாக ட்ரிம் பண்ணுக்கோங்க. பிறகு அழுக்கு எடுக்கும் ஸ்பேட்ஷூலாவை எடுத்து நகங்களின் உள்ளே இருக்கும் அழுக்குகளை நீக்கி நன்றாக சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.

4 விதமான பாத பராமரிப்பு கருவிகளை பயன்படுத்துதல் இந்த 4 விதமான கருவிகளை கொண்டு இப்பொழுது பாத பராமரிப்பு செய்ய வேண்டும். க்யூட்டிகல் புஷ்சர், இறந்த செல்களை நீக்கும் ஸ்போர்க், ரேசர் மற்றும் ஃபில்லர். க்யூட்டிகல் புஷ்சர் – இதைக் கொண்டு பாதத்தில் உள்ள தடித்த பகுதியிலிருந்து மெதுவாக எல்லா இடங்களிலும் சமமாக பரவும்படி அழுத்த வேண்டும். ஸ்போர்க் – இதைக் கொண்டு உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் மிகவும் பாதுகாப்பானது. ரேசர் – இது தேவை என்றால் பயன்படுத்தி கொள்ளவும். சில பேர்களுக்கு பாதங்களில் நீளமான முடிகள் இருந்தால் அதை நீக்க பயன்படுத்தி கொள்ளலாம். பில்லர் – நகங்களை வட்ட அல்லது சதுர வடிவமாக வடிவமைக்க பயன்படுகிறது.

வீட்டில் தயாரிக்கும் பாத ஸ்க்ரப்பர் இதற்கும் முதலில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை மூழ்க வைக்க வேண்டும் இங்கே பாதத்தை ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும் பாத ஸ்க்ரப்பிற்கு தக்காளி, கடலை மாவு, சந்தனப் பொடி கொண்டு பயன்படுத்த வேண்டும் தேவையான அளவு கடலை மாவு, சந்தனப் பொடியை எடுத்து அதனுடன் ஒரு துண்டு தக்காளியை சேர்த்து பாதங்களை நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இறுதியில் தக்காளி பழத்தின் ஜூஸை பாதங்களின் மேல் பிழிந்து விட வேண்டும். எனவே இதை செய்வதற்கு வாஷ்ரூம் வசதியாக இருக்கும். தக்காளி ஸ்க்ரப் உங்களுக்கு கஷ்டமாக இருக்குனு நினைத்தால் உப்பு, சுகர் மற்றும் தேன் கலந்த ஸ்க்ரப்பையும் பயன்படுத்தலாம்.

வீட்டில் தயாரிக்கும் ஆன்டி டேன் பாத பேக்ஸ் உங்கள் பாத ஸ்க்ரப் வேலை முடிந்து விட்டால் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு ஆன்டி டேன் பேக் பயன்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே ஆன்டி டேன் பேக்ஸ் தயாரிக்கலாம். ரெசிபி 1:சுகர், கற்றாழை, காபி பவுடர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கலந்த ஆன்டி டேன் ரெசிபி 2:அரிசி மாவு, தேன், உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை ஜூஸ் கலந்த ஆன்டி டேன் மேலே குறிப்பிட்டுள்ள ஆன்டி டேன் ரெசிபிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யவும். இந்த ஆன்டி டேன் பேக்கை பாதங்களில் மசாஜ் செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீர் உள்ள டப்பில் பாதங்களை நனைக்க வேண்டும். பிறகு பாதங்களை துடைத்து நன்றாக உலர விட வேண்டும் இதனால் உங்க பாத டேனில் நல்ல மாற்றத்தை காணலாம். பாத க்ரீம் பயன்படுத்துதல் இறுதியாக பெட்ரோலியம் ஜெல் அல்லது பாத க்ரீம்மை கொண்டு பாதத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்க வேண்டும். இந்த வீட்டிலேயே செய்யும் பாத பராமரிப்பு உங்கள் நிறமாற்றம் அடைந்த பாதங்களை எளிதில் அழகாக மாற்றிவிடும். என்ன யோசிக்கீங்க பெண்களே அப்புறம் என்ன நெயில் பாலிஷ் போட்டு உங்க பட்டு போன்ற பாதத்துடன் வெளியே கிளம்ப வேண்டியது தானே.