‘ஆவிகள்’ காமிராவில் சிக்குவது எப்படி?

காமிராவில் எடுத்த புகைப்படத்தில் ஆவி உருவம் பதிவாகியிருப்பதாக அவ்வப்போது படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
aavi
காமிராவில் எடுத்த புகைப்படத்தில் ஆவி உருவம் பதிவாகியிருப்பதாக அவ்வப்போது படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

சாதாரணமான மனிதக் கண்ணுக்குத் தெரியாத ஆவிகள், பேய்கள், காமிராவில் மட்டும் எப்படி சிக்கிக்கொள்கின்றன?

பிலிம் காமிரா முதல் இன்றைய ஸ்மார்ட்போன் காமிரா வரை எல்லாவற்றிலும் பேய்கள் மாட்டிக்கொள்கின்றன.

இதற்கு நிபுணர்கள் தரும் விளக்கம், காமிராவில் ஏற்படும் கோளாறு, சிலர் பயன்படுத்தும் உத்திகள்தான் ஆவி உருவங்களை உருவாக்குகிறது என்பதுதான்.

‘இமேஜ் அலைசிங்’ எனப்படும் புகைப்படச் சிதைவு மற்றும் புகைப்படத் தகவலைப் பதிவு செய்யும் காமிரா, சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக பேய் போன்ற உருவங்கள் தோன்றுகின்றன.

‘ஸ்டீரியோஸ்கோபிக்’ படங்கள், இரட்டை வெளிப்பாடு எனப்படும் டபுள் எக்ஸ்போஷர் போன்றவை கூட பேய்களின் உருவங்களை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகப் பயன்படுகின்றன.

திறமை வாய்ந்த ஒருவரால், இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆவிகள் மற்றும் பேய்கள் தென்படுவதைப் போன்ற புகைப்படங்களை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.