மீசைய முறுக்கு இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்பு

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி.யின் தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் விவேன், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினைக்கு நடுவே வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நல்ல படங்களை மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. இனி எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருக்கிறார்.

படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றியிருக்கிறது. படம் வெளியான பிறகு இசை உரிமையை கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருந்தது.