புஜாராவின் புதிய சாதனை

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என வர்ணிக்கப்படும் புஜாரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

pujaara

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நேற்றைய (வியாழக்கிழமை) முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய புஜாரா, 34 ஓட்டங்களை தொட்டபோது 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

அத்தோடு, தனது 50வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தும் சாதனை படைத்தார். இது டெஸ்ட் அரங்கில் அவரது 13வது சதமாகும்.

புஜாரா, 232 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்களாக 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.