கிளிநொச்சி விபத்து: பெண் மரணம்

கிளிநொச்சி  சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இரண்டு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Accident-1

 

சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறத்தில், மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை