ஒரே நாளில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு விருந்து

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள `விவேகம்’ படமும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படமும் இந்த ஆண்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

`விவேகம்’ ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், `மெர்சல்’ தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமான ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படங்கள் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களை கலக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 20-ஆம் தேதி வெளியான `விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலின் பாடல் வரிகள் வீடியோவாக இணைதளங்களில் வெளியிடப்பட்டது.

அதேநேரத்தில் நேற்று ஆடி வெள்ளி என்பதால், விஜய்யின் `மெர்சல்’ படம் குறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி `மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.

அது முதல் விஜய் மற்றும் அஜித் இருவரது ரசிகர்களும் டுவிட்டரில் போஸ்டுகளை போட்டு இரு படங்களையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.